நிர்வாக திறமையற்ற விடியா ஆட்சியின் முதல்வர்! கோவை கார் வெடிப்பு குறித்து பழனிச்சாமி அறிக்கை! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் மாருதி கார் வெடித்ததில் ஜமேஷா முபின் என்பவர் பலியானது போலீசார் விசாரணை தெரிய வந்தது. ஜமேசா முபின் ஒரு பொறியியல் பட்டதாரி. அவர் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் ரசாயன பொருள் மற்றும் பொட்டாசியம் சல்பரை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் ஜமேசா முபின் வீட்டு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சனிக்கிழமை இரவு 11:25 மணிக்கு மர்ம பொருள்களை ஜமேசா முபின் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் எடுத்துச் செல்லும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது.

இந்நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர்களும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது "23.10.2022 அன்று காலை கோவை நகரில் உக்கடம் கோட்டைமேடு பகுதியில், சங்கமேஷ்வரர் திருக்கோயில் அருகே அதிகாலை 4.10 மணியளவில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாகவும், காரில் இருந்த ஒரு நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன.

வெடிகுண்டு வைத்த காரை இயக்கி மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் வெடிக்கவைத்து, பல உயிர்களை பலி வாங்க சதி செய்த நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு குறித்து உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிர்வாகத் திறமையற்ற விடியா ஆட்சியின் முதல்வர் என்ன பதில் கூறப்போகிறார்? உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையை விளக்குவதாகவே இது பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கார் குண்டு வெடிப்பு என்பது தற்செயலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? அல்லது ஏதேனும் சதி வேலையா? அப்படியெனில் இதன் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் இருக்கின்றனரா என்று காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தமுமின்றி, சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளையும், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS release the press note about kovai car blast


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->