ஈரோடு பாராளுமன்ற தேர்தலுக்கு 2,400 வாக்கு பதிவு எந்திரங்கள்! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தந்த தொகுதிகளுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, மக்களவை தேர்தலுக்காக ஈரோட்டுக்கு  2,400 வாக்குப்பதிவு எந்திரங்களை, இன்று கர்நாடக மாநிலம் பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து வேனில் கொண்டு வரப்பட்டது. அதில் 1400 பேலட் எந்திரங்களும், 1000 கட்டுப்பாட்டு கருவி எந்திரங்களும் அடங்கும்.

மேலும், இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது. 

இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல்கள் கலைக்கப்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர குடோனில் அடுக்கி வைக்கப்பட்டன.

அடுத்த வருடம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெறுகிறது என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode 2400 electronic voting machines


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->