ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!  - Seithipunal
Seithipunal


பத்திரிக்கையாளர்கள் போராட்டம் காரணமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. 2 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே 3வது சுற்று எண்ணும் பணி தொடங்கும் என்று, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி விளக்கம் அளித்துள்ளார்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் 2,3 வது சுற்றுகள் எண்ணிக்கை தொடங்கப்பட்டதால் பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள், இனி வேகமாக வெளியிடப்படும் என்றும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு உட்பட்டு தான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது என்றும், 2 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே 3வது சுற்று எண்ணும் பணி தொடங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி விளக்கம் அளித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி :

காங்கிரஸ் - 23321
அதிமுக - 8124
நாம் தமிழர் - 1498
தேமுதிக - 209


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By Election Vote Counting stop cong leading


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->