"தமிழகத்தில் காந்தியை கூட சாதி தலைவராக்கி விடுவார்கள்" தமிழகத்தை மட்டம் தட்டிய RN ரவி !! - Seithipunal
Seithipunal


தேச பிதா மகாத்மா காந்தியும், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலும் ஒரு வேலை தமிழகத்தில் பிறந்திருந்தால், அவர்கள் இங்குள்ளவர்களால் சாதித் தலைவர்களாக மாற்றப்பட்டிருப்பார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

வரலாற்றில் 1801ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி, தமிழகத்தின் மாபெரும் போர்த் தலைவர்களான மருது சகோதரர்களால், இந்தியாவை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான மூலோபாய மற்றும் தொலைநோக்கு ஆவணமான ஜன்புத்வீப் பிரகடனத்தின் நினைவேந்தல் நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி  இதனைக் குறிப்பிட்டார்.

குறிப்பாக அரசியல் வகுப்பைச் சேர்ந்த மக்கள், சுதந்திரப் போராட்டத்தின் தியாகிகள் மற்றும் மாவீரர்களின் நினைவுச் சின்னங்களுக்குச் சென்று, சில மலர்களைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள், பின்னர் அவர்கள் அவற்றை மறந்துவிடுகிறார்கள் என்று ரவி கூறினார். நாட்டுக்காகப் போராடிய மருது சகோதரர்கள் சாதித் தலைவர்களாகத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

சுதந்திரப் போராளிகள் சாதித் தலைவர்களாகக் குறைக்கப்படுகிறார்கள், ஏனென்றால் அரசு அவர்களைக் கைவிடும்போது சுதந்திர போராட்ட தியாகிகள் சேர்ந்த சமூகம் அவர்களைச் சொந்தமாக்குகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகள், மாவீரர்கள் நம் முன்னோர்கள். ஜம்புத்வீப் பிரகடனத்தைப் படித்தால் அதில் ஜாதியைக் குறிப்பிடவில்லை. அந்த சாதி உணர்வு அங்கே இல்லை என் ஆளுநர் ரவி கூறினார்.

இந்த அறிவிப்பு மறுத்து சகோதரர்கள் வாழ்ந்த சிவகங்கைக்கு மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமான சுதந்திரம் எப்படி என்பதை ஆளுநர் விரிவாக எடுத்துரைத்தார். பாஞ்சாலங்குறிச்சிப் போருக்குப் பிறகு, முழு நகரமும் தரைமட்டமாக்கப்பட்டதையும், நிலம் முழுவதையும் தரிசாக மாற்றுவதற்காக தரையில் உப்பு பரப்பப்பட்டதையும் அவர் அந்த விழாவில் நினைவு கூர்ந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

even gandhi would be a community leader if he was born in TN


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->