தமிழிசை கதை!"அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை.." - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!!
evks elangovan madurai press meet
தமிழிசை சௌந்தர்ராஜன் கவர்னராகவே இருந்திருக்கலாம் எனவும் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக தமிழிசை நிலைமை உள்ளதாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிலிருந்து தமிழிசை சௌந்தரராஜன் விலகி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னையில் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் வெற்றி வாய்ப்பினை இழந்தார். தோல்வியை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக இன்று பதவி ஏற்கிறார்.
மதுரையில் இன்று செய்தியார்களை சந்தித்த இ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறுகையில், அண்ணாமலையும் தமிழிசை சவுந்தர்ராஜனும் பேச்சியில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். தமிழிசை சௌந்தர்ராஜன் பொருத்தவரை அவரை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
ஊர்களில் ஒரு பழமொழி கூறுவார்கள், அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஒழுங்காக கவர்னர் பதவியில் இருந்திருக்கலாம். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய அமைச்சராக வர வேண்டும் என்று பேராசை பட்டு முகத்தை தெளிவாக வைத்துக்கொள்ளாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இறுதியில் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு டெபாசிட் மட்டுமே கிடைத்தது என்று கூறியுள்ளார்.
English Summary
evks elangovan madurai press meet