திமுகவின் தயவால் தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது - ஈவிகேஎஸ் இளங்கோவன்!
EVKS Elangovan Say about DMK Alliance and Karthik Chidambaram
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் தயவால் தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மேலும் கார்த்திக் சிதம்பரம் சுயநலத்துடன் பேசி இருக்கிறார் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக இந்த தேர்தலில் இறங்கி வேலை செய்யவில்லை என்றால், கார்த்திக் சிதம்பரம் அவரின் தொகுதிகள் டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது.
வெற்றி பெற்று இன்று எம்பி ஆன பிறகு, பாதுகாப்பாக பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு கார்த்திக் சிதம்பரம் இப்படி பேசுவது நியாயம் இல்லை.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அதிகம் தான். திமுக தொகுதி பங்கீட்டில் பெருந்தன்மையோடு நடந்து கொண்டுள்ளது.
திமுகவுக்கு கூட்டணியில் இருந்து கொண்டு நெருக்கடியை ஏற்படுத்துவது போன்ற பேச்சுகளை நியாயமாக கருத முடியாது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கடந்த இருபதாம் தேதி கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில், "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருப்பதால் கூனி குறுகி நிற்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் பிரச்சனையை பேச வேண்டும் நாம்.
இந்த தொகுதியில் திமுக ஆதரவால் தான் வெற்றி பெற்றோம். ஆனால் நமக்கு பலம் இல்லை என்று எண்ணி விடக்கூடாது. காங்கிரஸ் கட்சிக்கென்று தனி வாக்கு வங்கி உள்ளது, தனித்து நிற்கும்போது கனிசமான வாக்குகளை பெற்றது" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
EVKS Elangovan Say about DMK Alliance and Karthik Chidambaram