நிதியமைச்சரிடம் கையில் காசில்லை... பையில் தான் இருக்கு - காங்கிரஸ் எம்.எல்.ஏ காட்டம்.!
evks Elangovan speech
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு அல்லது ஆந்திர பிரதேச மாநிலங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததாகவும் தன்னிடம் தேவையான பணம் இல்லாத இல்லை என்பதால் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனால் நாட்டின் நிதி அமைச்சர் இடமே போட்டியிடுவதற்கான பணம் இல்லையா என பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்தது.
இதற்கு நிர்மலா சீதாராமன், என்னுடைய சம்பளம் என்னுடைய சம்பாத்தியம் என்னுடைய சேமிப்பு எல்லாம் என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி எனக்கு சொந்தம் கிடையாது என பதிலளித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்திருப்பதாவது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையில் காசு இல்லை.
ஆனால் அவரது பையில், படுக்கையறையில் பணம் உள்ளது. இந்தியாவின் சர்வாதிகாரம் என அமெரிக்கா, ஜெர்மனி தெரிவிப்பதை நிர்மலா சீதாராமனின் கணவரை ஆதரிக்கிறார். தேர்தல் ஆணையம் நரேந்திர மோடியின் கைபாவையாக செயல்படுகிறது என தெரிவித்துள்ளார்.