முன்னாள் முதலவர் ஜெயலலிதா நினைவு தினம் - தமிழிசை சௌந்தர்ராஜன் மலர் தூவி மரியாதை.! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். 

அதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதாவின் நினைவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி, இன்று ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதற்காக பல அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் மௌன அஞ்சலியும் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு தெலங்கானா மாநிலத்தின் கவர்னரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை... துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex chief minister jeyalalitha memorial day telungaana governor tamilisai soundarrajan tribute


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->