விபத்தில் சிக்கிய மூதாட்டி - வேட்டியை வரிந்துகட்டி களத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


விபத்தில் சிக்கிய மூதாட்டி - வேட்டியை வரிந்துகட்டி களத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர்.!

சென்னையில் உள்ள புழல் அருகே இருச்சக்கர வாகனத்தில் வந்தவர் மூதாட்டி ஒருவருடன் விபத்துக்குள்ளாகி இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விபத்தில் சிக்கிய மூதாட்டியை மீட்டு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தார். 

அதுமட்டுமல்லாமல், அவர் இந்த மூதாட்டியை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்க சொல்லி ஆட்டோ ஓட்டுனருக்கு பணத்தையும் கொடுத்து அனுப்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- "செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்த போது சென்னை புழல் அருகே மூதாட்டி ஒருவருடன் இருச்சக்கர வாகனத்தில் வந்தவர் விபத்துக்குள்ளாகி இருந்தனர். 

அவர்கள் 10 நிமிடங்களுக்கு மேலாக ஆம்புலன்ஸ் வராமலும் எந்தவித உதவியும் பெறாமலும் இருந்தனர். அதன் பிறகு நான் ஆட்டோ ஒன்று ஏற்பாடு செய்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். 

அந்த சாலையில் சென்ற யாரும் மூதாட்டி காயமுற்று கிடப்பதை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதை பார்க்கும் போது மனிதம் மறந்து வருவதை நம்மால் உணர முடிந்தது. 

இன்று வேறொருவருக்கு என்று நாம் கடந்து போனால் நாளை நமக்கும் அது தான்! இருப்போம் சற்று ஈரத்துடன்! மருத்துவ உதவியே மகத்தான உதவி!." என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex minister jayakumar help to woman in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->