பட்டியலினத்தவருக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி - கோவி. செழியனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த நிலையில், சமீபத்தில் உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 

இதையடுத்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டதுடன், 4 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இதில், செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி. செழியன், சா.மு. நாசர் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்

இவர்களுக்கு நேற்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள கோவி செழியனுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் வைகைச் செல்வன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:- "நானும் கோவி. செழியனும் ஒரே நாளில் 'முனைவர்' பட்டம் பெற்றோம். எளியவன் நான் பள்ளிக்கல்வி அமைச்சராகப் பணியாற்றினேன்.

இப்போது அவர் உயர்கல்வி அமைச்சராகி இருக்கிறார். எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..! பட்டியலினத்தவருக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி.. பாராட்டாமல் இருக்க முடியுமா..?" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex minister vaikai selvan wishes to kovi sezhiyan


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->