பொங்கல் 2025 இலவச வேட்டி சேலை - தமிழக அரசு தரப்பில் வெளியான செய்தி! - Seithipunal
Seithipunal


பொங்கல் 2025, வேட்டி சேலை வழங்கும் திட்டம் மற்றும் முதியோர் ஓய்வூதிய பயனாளிகளுக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றின்கீழ் உற்பத்தி தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை, தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துச்சாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மேலும், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களை சேர்ந்த விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

ஆய்வின்போது வேட்டி சேலை வழங்கும் திட்டம், பொங்கல் 2025-க்கு தேவையான அனைத்து வேட்டி மற்றும் சேலைகளையும் 31.12.2024க்குள் நிறைவு செய்யுமாறு விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி துறை இயக்குநர் அ. சண்முக சுந்தரம், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt Pongal 2025 free Vesti saree


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->