புறம்போக்கு நிலங்களை பயன்படுத்தலாம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Excluded lands used Madras High Court order
புறம்போக்கு நிலங்களை மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிப்காட் தொழில் பூங்கா, ஐடி பூங்கா, விளையாட்டு திடல், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றிற்காக அரசு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுபோல் கால்நடை மேச்சலுக்காக ஒதுக்கிய புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யவும், பட்டா மாறுதல் செய்யவும் தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நிலத்தை மாற்றுவதாக இருந்தால் கால்நடை மேய்ச்சலுக்காக மாற்று நிலத்தை கண்டறிந்த பின்னரே மாற்ற முடியும் என உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக நில ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது நிலையில் புறம்போக்கு நிலங்களை மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Excluded lands used Madras High Court order