#BREAKING : பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் விலக்கு.. தமிழக அரசு அறிவிப்பு.!
Exemption in payment of education fees for school students
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், அந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிப்பை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா எனும் உயிர்க்கொல்லி நோயால் பலர் தங்களது குடும்பங்களை இழந்துள்ளனர். அவ்வாறு கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் நலன் கருதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட தொகையை, அவர்களது பெயரில் வங்கிக்கணக்கில் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது தனியார் பள்ளிகளில் பயிலும், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலகு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறக்கத்திருக்கிறது.
English Summary
Exemption in payment of education fees for school students