பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த கில்லாடி பெண் - போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை அடுத்த மாந்தாங்கல் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வள்ளி. பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த இவர் வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இது தொடர்பாக போலீஸார்கூப் புகார் வந்துள்ளது. அதன் படி மருத்துவம் மற்றும் ஊரகத்துறை இணை இயக்குநர் விஜயா முரளி தலைமையிலான மருத்துவ குழு இன்று சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டது. அப்போது, வள்ளி வீட்டில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். 

அவரை மருத்துவக் குழு கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் உரிய மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தது உறுதியானது. இதையடுத்து அதிகாரிகள் வள்ளியை பிடித்து ராணிப்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

பின்னர் சம்பவம் தொடர்பாக மருத்துவ குழுவினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ராணிப்பேட்டை போலீஸார், வள்ளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலி மருத்துவர் கைதான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fake female doctor arrested in ranipet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->