ஆவின் மாதாந்திர அட்டையுடன் குடும்ப அட்டை இணைப்பு.!   - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தினமும் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீலநிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பால், சில்லறை விலையில் அறுபது ரூபாய்க்கும், சிகப்பு பாக்கெட் பால் எழுபத்தாறு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், ஆவின் நிறுவனத்தில் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ஆரஞ்சு நிற பால்பாக்கெட் 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில், ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக, ஆவின் மாதாந்திர அட்டையுடன் குடும்ப அட்டை இணைக்கும் பணியை ஆவின் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, "இந்த குடும்ப அட்டை இணைக்கும் பணி 27 மண்டலங்களில் இணையதளம் மூலமாக நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும்" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

family card link in aavin monthly card


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->