குடும்ப சொத்து தகராறில்..அண்ணியின் தலையை வெட்டிவிட்டு..கொழுந்தன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


எடப்பாடி அருகே சொத்து தகராறில் சொந்த அண்ணியை வெட்டி கொலை செய்துவிட்டு கொழுந்தன் மது அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே முப்பனூரில் கோவிந்தன் மனைவி மாதேஸ்வரி மற்றும் தம்பி அண்ணாதுரை ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் அண்ணாதுரை தனது அண்ணி மாதேஸ்வரிடம் சொத்தை பிரித்துத் தரும்படி அவ்வப்போது அண்ணாதுரை தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அதற்கு மாதேஸ்வரி தர முடியாது என கூறியதால் ஆத்திரமடைந்த அண்ணாதுரை, பால் வாங்கி கொண்டு திரும்பிய அண்ணி மாதேஸ்வரியை பட்டப்பகலில் கொடுவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடியுள்ளார்.

தப்பித்து ஓடிய அண்ணாதுரை பயத்தில் விஷம் அருந்தி விட்டு ஆபத்தான நிலையில் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதனையடுத்து, அண்ணாதுரையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி காவல்துறையினர் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Family property dispute beheading of sister-in-law


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->