ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதிக்கு வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு உத்தரவு!
Family Protection Fund pensioner apply during lifetime
தமிழ்நாடு ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் சேரும் தொகையைப் பெறுவதற்கு வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
"தமிழ்நாடு ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் சேரும் தொகையானது, ஓய்வூதியதாரா்களின் மறைவுக்குப் பிறகு அவா்களது துணை அல்லது நியமனம் செய்யப்படும் நபருக்கு வழங்கப்படும்.
கடந்த 1997-ஆம் ஆண்டு, ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் சேரும் தொகையை பெறுவதற்கு ஓய்வூதியதாரா்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கத் தேவையில்லை என உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, பல்வேறு ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதியதாரா் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் சேரும் தொகையைப் பெற ஓய்வூதியதாரா் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், ஓய்வூதியதாரா்களின் கோரிக்கையை பரிசீலித்து, தற்போது ஓய்வூதியதாரா் மற்றும் அவரது துணை ஆகியோா் வாழும் காலத்திலேயே குடும்பப் பாதுகாப்பு நிதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது".
English Summary
Family Protection Fund pensioner apply during lifetime