பிரபல சரித்திர பதிவேட்டு குற்றவாளி அதிரடி கைது!
Famous Historical Record Accused Arrested
புதுச்சேரியில் பிரபல குற்றவாளியை சிறப்பு அதிரடிப்படையினர் அதிரடியாக கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி ஓதியஞ்சாலை காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவன் பிரபல குற்றவாளி மணிகண்டன் என்ற ஸ்டிக்கர் மணி .24 சரித்திர பதிவேட்டு குற்றவாளியான இவர் மீது புதுச்சேரி மற்றும் தமிழக காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் இவர் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டதால் சில மாதங்களுக்கு முன்பு ஓதியஞ்சாலை காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டு காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்த இவர் நீதிமன்ற உத்தரவுப்படி காரைக்காலில் கையெழுத்திட அறிவுறுத்தப்பட்டிருந்தது.ஆனால் கையெழுத்துஇட செல்லாமல் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட திட்டமிட்டு இருப்பது போலீசாருக்கு தெரியவந்து. இதனை அறிந்த ஓதியஞ்சாலை போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கண்ட மணிகண்டன் என்ற ஸ்டிக்கர் மணியைசுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
English Summary
Famous Historical Record Accused Arrested