மூன்று மாத கைக்குழந்தை அழுவதை பொறுக்காத தாய்; தண்ணீர் தொட்டிக்குள் வீசிக் கொன்ற கொடூரம்..!
Mother kills three month old baby by throwing it into a water tank
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அம்பிகாநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய கரீஷ்மா பாகேல் என்ற பெண், தனது 03 மாத ஆண் குழந்தையை காணவில்லை என கூற, அவரது கணவர் திலீப் போலீசாரிடம் புகார் அளித்த்துள்ளார்.
அதனை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கரீஷ்மா தனது 03 மாத குழந்தையை ஒரு அறையில் வைத்துவிட்டு குளிக்க சென்றதாகவும், திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து போலீசார் கரீஷ்மாவின் வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தியத்தில், குழந்தை அவர்களது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் இறந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டது. தண்ணீர் தொட்டிக்குள் 03 மாத குழந்தை தானாக சென்று விழுந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால், கரீஷ்மா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதன் பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசியதை கரீஷ்மா ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் கரீஷ்மாவை கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "கரீஷ்மா கர்ப்பமான சமயத்தில் இருந்தே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், தனது குழந்தை அதிகமாக அழுவதாக தனது குடும்ப உறுப்பினர்களிடம் கவலை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் குழந்தையை கொலை செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Mother kills three month old baby by throwing it into a water tank