மும்பை விமான நிலையத்தில் 9 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்..!!
kanja seized in mumbai airport
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பைக்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த கவால்ஜித் சிங் என்ற பயணியின் டிராலி பையை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் பச்சை நிறத்தில் 20 பாக்கெட்டுகளில் மர்ம இலை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து நடத்திய விசாரணையில் அது வீரியம் மிக்க கஞ்சா என்பதும் அதன் மதிப்பு ரூ.9 கோடியே 53 லட்சம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் போதை பொருளை கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது கஞ்சா கடத்திய கமிஷன் பணத்துக்காக ஆசைப்பட்டு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
kanja seized in mumbai airport