வியாபாரமாக மாறுகிறதா மொய் விருந்து! ரூ10 கோடி வசூலித்த திமுக எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


வசூலான பணம் கையால் முடியாததால் இயந்திரம் கொண்டு எண்ணப்பட்டது!

மொய் விருந்து கலாச்சாரம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் சாதி பாகுபாடில்லாமல் ஏழ்மையில் உள்ளவர்கள் திருமணத்திற்காகவும், கடன் அதிகமானவர்களும், சமூகத்தில் விளிம்பில் உள்ளவர்களும், வாழ வழியில்லாதவர்கள் தங்கள் சக்தி ஏற்ப மொழி விருந்து ஏற்பாடு செய்து அதன் மூலம் வரும் பணத்தை வைத்து மீண்டு வருவதற்காக நடத்தப்படும்.

 ஆனால் தற்பொழுது வீடு வாங்கவும், தொழில்களில் முதலீடு செய்யவும், அரசியலில் உள்ளவர்களும் பணம் வசூல் செய்யும் வியாபாரமாக மாறி உள்ளது.  

அண்மையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் 1000 ஆட்டுக்கிடா கறி, 1500 கிலோ கோழிக்கறி, மீன் வருவல் என 5 லட்சம் பேர் சாப்பிடும் அளவிற்கு தனது இல்ல காதணி விழா மொய் விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்.

மொய் விருந்து நடத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் இதற்கு முன் 8 முறை மொய் விருந்து நடத்தியவருக்கு இது 9வது முறை. 5 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடத்த வேண்டும் என்பது பொதுவான விதி.

ஆனால் கடந்த 40 வருடங்களாக திமுக எம்எல்ஏ அசோக் குமார் மொய் விருந்தை நடத்தி வருவதாகவும் இதையே பிரதான தொழிலாக நடத்தி வருகிறார் என பேராவூரணி மக்கள் குமுறுகின்றனர்.

மொய் விருந்துக்கு வந்தவர்கள் தாராளமாக பணத்தை அள்ளிக் கொடுத்து மொய் எழுதி உள்ளனர். அதனை கையால் முடியாது என்பதால் பணம் என்னும் இயந்திரம் கொண்டு எண்ணியதில் சுமார் 10 கோடி ரூபாய் வசூல் ஆனது தெரியவந்துள்ளது. இதன் மூலம் மொழி விருந்து புது சாதனை படைத்துள்ளார் பேராவூரணி திமுக எம்எல்ஏ அசோக் குமார்.

சமீபகாலமாக ஆளுங்கட்சியைச் சார்ந்த அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் நடத்தும் மொழி விருதுகளில் கோடி கணக்கில் பணம் வசூலாவது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் யுத்தியா அல்லது தற்பெருமைக்காக நடத்தப்படும் விருந்து உபசரிப்பார என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous Moi Virunthu DMK MLA collected Rs 10 crore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->