திண்டுக்கல்: ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - விவசாயி பலி, 8 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்துள்ளார். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி அருகே அசன்கொடை கிராமத்தை சேர்ந்தவர் குப்புச்சாமி. இவரது மகன் அபிராமன்(28) அப்பகுதியில் அவகோடா, பேசன்புரூட் உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட்டு வந்தார். 

இந்நிலையில், அபிராமன் அதேபகுதியை சேர்ந்த விவசாயிகளுடன் ஜீப்பில் பெருமாள்மலை சந்தைக்கு சென்றார். ஜீப்பை ஈஸ்வரன் என்பவர் ஓட்டிச்சென்றார். பின்பு அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது தாண்டிக்குடி அருகே வந்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அபிராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஓட்டுனர் ஈஸ்வரன் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஆபிராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தாண்டிகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer died 8 injured in Jeep overturned ditch in Dindigul


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->