காவலுக்குச் சென்ற விவசாயியை தூக்கி வீசிய யானை.! பீதியில் கிராம மக்கள்.!
farmer was injured when the elephant threw him in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை தூக்கி வீசியதில் விவசாயி படுகாயமடைந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மரக்கட்ட பகுதியை சேர்ந்தவர் விவசாயி சித்துருப்பா என்ற பசப்பா (60). இவர் கேழ்வரகு அறுவடை செய்த நிலையில், அதன் காவலுக்காக நேற்று இரவு மரத்தின் மேல் போடப்பட்ட குடிசையில் காவலுக்கு இருந்துள்ளார்.
இதையடுத்து அதிகாலை மரத்திலிருந்து கீழே இறங்கி வந்த போது ஒற்றை காட்டு யானை ஒன்று அங்கு வந்துள்ளது. இதைப் பார்த்த பசப்பா அங்கிருந்து ஓடி உள்ளார். ஆனால் பசப்பாவை துரத்திய யானை துதிக்கையால் தூக்கி வீசியது.
இதனால் கீழே விழுந்த பசப்பா பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பசப்பா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
farmer was injured when the elephant threw him in kirishnagiri