குண்டர் சட்டத்தில் கைதான விவசாயிகள்: அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விஜயகாந்த்!  - Seithipunal
Seithipunal


தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது, திருவண்ணாமலை செய்யாறு அருகே உள்ள சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் 20 பேரை கைது செய்தது அதிர்ச்சியையும் மனவேதனையும் ஏற்படுகிறது. 

அதைவிட மிக கொடுமையானது 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அனைவருக்கும் உண்ண உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 

இதனை வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற நிகழ்வுகள் இதுவரை அரசியல் வரலாற்றில் நடந்தது கிடையாது. விவசாயிகள் என்ன தவறு செய்தார்கள் என்பதற்காக அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. 

குண்டர் சட்டத்தின் கீழ் கைதான அனைத்து விவசாயிகளையும் தமிழக அரசு எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். 

அப்படி இல்லை என்றால் திருவண்ணாமலை, தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmers arrested Vijayakanth warned government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->