திருவாரூரில் பரிதாபம்.! அரசு பேருந்து மோதி தந்தை-மகள் பலி.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தந்தை-மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதி பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் இருசக்கர வாகனத்தில் மகள் மதுமதி, மற்றும் ஒன்றரை வயது பேத்தியுடன் திருவாரூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திருவாரூரில் இருந்து வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த பயங்கர விபத்தில் மீனாட்சிசுந்தரம் மற்றும் அவரது மகள் மதுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் குழந்தை பலத்த காயமடைந்த நிலையில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த தந்தை-மகள் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father and daughter killed in government bus collision in tiruvarur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->