ராணிப்பேட்டை : வீட்டில் உயிரிழந்த நிலையில் தந்தை.! துயரத்திலும் பொது தேர்வு எழுதச் சென்ற மகள்.! - Seithipunal
Seithipunal


வீட்டில் உயிரிழந்த நிலையில் தந்தை.! துயரத்திலும் பொது தேர்வு எழுதச் சென்ற மகள்.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியங்கன்னு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் துளசி-அருணா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில், மூத்த மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று கணிதத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு எழுதுவதற்காக துளசியின் மூத்த மகள் பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்தார்.

அப்போது துளசி படுக்கையில் உறங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். இந்த நிலையில், துளசியின் மூத்த மகள் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தேர்வை எழுத பள்ளிக்கு சென்றார். அங்கு தேர்வெழுதிய பின்னர் அவர் வீட்டிற்கு வந்து தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தனது துயரத்தை மறைத்துகொண்டு பொதுத்தேர்வை எழுதச்சென்ற நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father death daughter attend sslc exam in ranipettai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->