2-வது திருமணத்திற்கு எதிர்ப்பு.! மருமகளை அடித்துக்கொன்ற மாமனார்.! நெல்லையில் பயங்கரம்
Father in law who murder his daughter in law in nellai
திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மருமகளை மாமனார் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி கேபிரியல் நகர் பகுதியில் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தங்கராஜ் (50). இவருடைய மகன் தமிழரசன், ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துமாரி (28). இந்நிலையில் தங்கராஜின் மனைவி இறந்து விட்டதால் அவர் இரண்டாவது திருமணம் செய்வதற்காக, மகனிடம் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து விடுமுறைக்கு வந்திருந்த தமிழரசனிடம், தங்கராஜ் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்குமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழரசன் மற்றும் அவரது மனைவி இரண்டாவது திருமணம் செய்வதை கண்டித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக தமிழரசன் அவரது மனைவி மற்றும் தங்கராஜ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ், நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த மருமகள் முத்துக்குமாரியை இரும்புக்கு கம்பியால் சரமாரியாக தலையில் அடித்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்ததை பார்த்த தங்கராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முத்துக்குமாரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மருமகளை கொலை செய்த மாமனார் தங்கராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Father in law who murder his daughter in law in nellai