யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது., பார்த்து பார்த்து வளர்த்த தன் மகனை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட தந்தை.,மனதை உறைய வைக்கும் காரணம்.! - Seithipunal
Seithipunal


தான்ஆசையாக பெற்று வளர்த்த தன் மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் முருகன். இவர் சொந்தமாக தச்சுப்பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி மற்றும் செல்வேந்திரன், சுரேஷ் கண்ணன், ராகுல் என 3 மகன்கள் உள்ளனர். செல்வேந்திரனும், சுரேஷ் கண்ணனும் படித்து  சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.

father caring mentally challenged in bed க்கான பட முடிவு

ஆனால் 3-வது மகன் ராகுல். கை, கால் செயல்பட முடியாத,வாய் பேசவும் முடியாத ஒரு மாற்றுத் திறனாளி. வேதனையில் துடித்த முருகன் மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் ராகுலை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தனர்.

இருப்பினும் முருகன் மகனை நினைத்து எந்நேரமும் கவலைபட்டுக் கொண்டே இருந்தார்.அவரை விட்டு எங்குமே செல்லாமல், கூடவே இருந்து பாதுகாத்து வந்தார்.

தொடர்புடைய படம்

இருப்பினும் தன் மகன் வேதனையில் துடிப்பதை தாங்கி கொள்ள முடியாத முருகன்,அதனை சகித்து கொள்ள முடியாமல் அவருக்கு மரணம்தான் முடிவு என திட்டமிட்டார். 

அதன்படி இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த ராகுலை தூக்கிக் கொண்டு வீட்டின் வெளிப்புறம் வந்து 7 அடியில் இருந்த தண்ணீர் தொட்டியில் ராகுலை போட்டார். பார்த்து பார்த்து வளர்த்த தன்  மகனை அந்த தண்ணீரிலேயே மூழ்கடித்தார். இதில் ராகுல் மூச்சுத்திணறி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய படம்

பின் கதறி அழுதவாறே வீட்டிற்குள் ஓடிய தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் தூங்கி எழுந்ததும், அறைக்குள் சென்ற பாக்கியலட்சுமி கணவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து பதறினார். வெளிப்பக்கம் தன் மகன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி பிணமாக கிடப்பதை கண்டு நடுங்கி கதறினார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father killed his mentally challenged son


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->