ஸ்டாலின் குறித்த உண்மையை போட்டுடைத்த பாத்திமா பாபு.. மீண்டும் கிளம்பிய சர்ச்சை..!!
fathima babu fb live about stalin
திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், நடிகை பாத்திமாவுக்கு 'விட்ட குறை தொட்ட குறை' யாக ஒரு உறவு இருப்பதாக 30 வருடங்களாக மக்களிடையே பேச்சு இருக்கிறது. அதாவது 30 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் காட்டும் அரசியல்வாதிகளின் மகனைப் போல ஸ்டாலினும் இளம் வயதில் துடிப்புடன் சில சில்மிஷங்கள் செய்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அந்தவகையில், தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமாவை கடத்தி சென்று சில பல சில்மிஷ வேலைகளை செய்ததாக 30 வருடங்களாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு தற்போது பாத்திமா பாபு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது குறித்து ஃபேஸ்புக் லைவில் பேசிய அவர், எனது வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. என்னை கடத்தியதாக கூறியபோது, நான் அதற்கு அப்பொழுதே விளக்கம் அளித்து விட்டேன். ஆனால் நான் சொன்ன விளக்கம் எந்த ஊடகங்களிலும் வரவில்லை.
மேலும், சில காலம் செய்தி வாசிப்பாளராக இருந்த நான், இடையில் ஒரு தொடரில் நடிப்பதற்காக ஒப்புக் கொண்டேன். அதனால் செய்தி வாசிக்க வரவில்லை இந்த சமயத்தில் தான் இப்படி ஒரு வதந்தியை பரப்பி இருக்கிறார்கள் என்று விளக்கமளித்துள்ளார்.
English Summary
fathima babu fb live about stalin