இது அரசியல் கோமாளித்தனம்! எந்த ஊழலை மறைக்க இந்த நாடகம்? CM ஸ்டாலினுக்கு கார்ட்டூன் போட்டு கேள்வி எழுப்பிய பாஜக!
BJP TN Condemn to DMK CM MK Stalin
இப்பொழுது எந்த ஊழலை மறைக்க இந்த நாடகம் என, முதல்வர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "உங்கள் திருட்டு மாடல் அரசு சம்பந்தமில்லாமல் ஒரு பிரச்சினையைக் கிளப்புகிறது என்றாலே, எதையோ மூடி மறைத்து மக்களை மடைமாற்றத் துடிக்கிறது என்று தானே அர்த்தம்? மும்மொழிக் கொள்கை எதிர்ப்புக்கு பின்னால் டாஸ்மாக் மெகா ஊழல் ஒளிந்து இருந்ததைப் போல.
கர்நாடக அரசிடம் முறையிட்டு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய குடிநீரைப் பெற்றுத் தர துணிவற்ற நீங்கள், கேரளா அரசைக் கண்டித்து தமிழகத்தில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த திராணியற்ற நீங்கள், அவர்களை இணைத்துக் கொண்டு தமிழக உரிமைகளை காக்கப் போகிறீர்களா? என்ன பித்தலாட்டம் இது?
மேலும், தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் இருக்காது எனவும், அதனால் எந்த மாநிலத்தின் தொகுதிகளும் குறைக்கப்படாது எனவும் நமது பிரதமர் அவர்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் தெளிவாக்கிய பிறகும் கூட நீங்கள் இப்படிக் கூட்டம் போடுவது யாரை ஏமாற்றுவதற்காக?
உண்மையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்று கூறியது உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நியாயப்படி அவர்களைத் தானே நீங்கள் எதிர்க்க வேண்டும்? ஆனால், திருடன் கையில் சாவி கொடுப்பதைப் போல காங்கிரசாரின் கூற்றை எதிர்த்துப் போராட அவர்களையே அழைத்துள்ளீர்களே, உங்கள் அரசியல் கோமாளித் தனத்திற்கு ஒரு அளவே இல்லையா ஸ்டாலின்? என்று தெரிவித்துள்ளது.
English Summary
BJP TN Condemn to DMK CM MK Stalin