பன்னிகுட்டியா? பதிலுக்கு கருணாநிதிக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டால் நாகரிகமாக இருக்குமா? அதிமுக மாணவர் அணி கண்டனம்!
AIADMK Student Wink Condemn to DMk and DMK Minister
திமுக சார்பாக நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில், திமுக அமைச்சர் அன்பரசன், "மத்திய அரசு அறிவுறுத்தியபடி தென்னிந்திய மக்கள் ஒரே ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளனர்.
ஆனால், வட இந்தியர்கள் பன்னி குட்டிகளைப் போல் அதிக குழந்தைகளை பெற்றதால் மக்கள் தொகை அதிகரித்துள்ளது" என்று பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த வீடியோவை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அதிமுக மாணவர் அணி, "தொகுதி மறு சீரமைப்பில், மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்கு 7.18 % சதவீதத்தில் இருந்து குறையக் கூடாது என்பதுதான் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலைப்பாடு,
அதற்காக ஒரு அமைச்சர் வடமாநிலங்களை இப்படி இழிவாக பேசவேண்டுமா?
உங்கள் இண்டி கூட்டணியில் இருப்பவர்களும் அதே வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் தானே?
பதிலுக்கு அவர்கள் திரு. கருணாநிதிக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டால் நாகரிகமாக இருக்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
AIADMK Student Wink Condemn to DMk and DMK Minister