அம்பையில் பரிதாபம்... மின்னல் தாக்கி அரசு பெண் ஊழியர் உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மின்னல் தாக்கி அரசு பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பை பகுதியை சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி வெள்ளையம்மாள் (51), நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று மாலை வேலை முடிந்து வயல்வெளி வழியாக வெள்ளையம்மாள் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது இடி மின்னலுடன் மழை பெய்ததால், திடீரென மின்னல் தாக்கி வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த வெள்ளையம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Female government employee killed by lightning in ambai tirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->