வெள்ளியங்கிரி மலையில் ஐந்து பக்தர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பூண்டி மலைப்பகுதியில் வெள்ளியங்கிரி மலைக் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு ஏழு மலைகள் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே உள்ளிட்ட மூன்று மாதங்களில் மட்டும் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

அதிலும் குறிப்பாக, மகா சிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் தமிழகத்திலுருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழு மலைகளை ஏறி சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும், மலை ஏறும்போது 5 பேர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். 

இளைஞர், முதியவர் என வயது வித்தியாசம் இல்லாமல் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகள் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. 5 பேர் உயிரிழப்பை அடுத்து, வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு வனத்துறையின் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fie devotees died in velliyangiri hills


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->