உலக நம்மை வேண்டி தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்..புதுவையில் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்!
The Muslims who prayed for us in the world Ramzan festivities in Puducherry
ரம்ஜான் பண்டிகையொட்டி உலக நம்மை வேண்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள், மசூதிகளுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டனர்.
ரமலான் முடிவுக்கு வந்ததற்கான அறிகுறியாக பிறை சந்திரன் நேற்றிரவு தெரிந்ததனை தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள இஸ்லாமிய மக்கள் இன்று ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இன்று காலையில் இருந்து, மசூதிகளுக்கு சென்ற அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.

டெல்லியில் உள்ள புகழ் பெற்ற ஜமா மசூதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இறை வணக்கத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் புனித ரமலான் மாத நிறைவை குறிக்கும் வகையில், புதிய ஆடைகளை அணிந்து வந்து ஒற்றுமையாக தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக புதுச்சேரியில் உள்ள இஸ்லாமிய மக்கள், மசூதிகளுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டனர்.மேலும் ரம்ஜான் பண்டிகையொட்டி உலக நம்மை வேண்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.அப்போது புதிய ஆடைகளை அணிந்து வந்து ஒற்றுமையாக தொழுகையில் ஈடுபட்டனர்.
English Summary
The Muslims who prayed for us in the world Ramzan festivities in Puducherry