தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் உடல் கருகி பலியான சோகம் ! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர். இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. .மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல்லில்  சிட்டி மருத்துவமனை என்ற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது.இந்த மருத்துவமனை தரைத்தளத்தில் வரவேற்பு அறை, முதல்தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, 2-வது தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் உள்நோயாளிகள் வார்டு, 3-வது தளத்தில் நோயாளிகள் வார்டு, 4-வது தளத்தில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தங்கும் அறை இருக்கிறது. இந்த ஆஸ்பத்திரியில் நேற்று 45 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ஆஸ்பத்திரி வரவேற்பு அறையில் திடீரென 'டமார்' என்ற சத்தத்துடன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் குபுகுபு என்று எரிந்த தீ சிறிதுநேரத்தில் தரைதளம் முழுவதும் பரவியது. அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கட்டுப்படவில்லை. மளமளவென மேல் தளங்களுக்கு தீ பரவியது.

எல்லா தளங்களிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஆஸ்பத்திரியின் 4 தளங்களுக்கும் புகைமூட்டம் பரவியது. இதனால் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் பதறி துடித்தனர். தங்களது உயிரை காப்பாற்றி கொள்ள அங்கும் இங்கும் ஓடினர்.

இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சு வாகனங்கள் அங்கு விரைந்தன. உயிர் தப்பிக்க நோயாளிகள் மற்றும் உறவினர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் லிப்ட் வழியாக கீழே இறங்க முயன்றனர். ஆனால் அவர்கள் லிட்டுக்குள் சிக்கி கொண்டனர். லிப்டை உடைத்து தீயணைப்பு படைவீரர்கள் அவர்களை மீட்டனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு திண்டுக்கல் மருத்துவ கல்லூரிஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர். இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கலெக்டர் பூங்கொடி, போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உள்ளிட்ட உயர் அதிகாாிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியை முடுக்கி விட்டனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire breaks out at private hospital 6 dead


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->