மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து.. பொங்கல் வேட்டி, சேலைகள் சாம்பல்..!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகள் உட்பட பல ஆவணங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் பிரிவு அலுவலகத்தில் நேற்று நல்லிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த இரவு காவலர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் இரண்டரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள், ஆவணங்கள், பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க வேண்டிய வேட்டி, சேலைகள் என ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire incident in Madurai Collector office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->