தமிழக  28 அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ்.பதவி.. மத்திய அரசு ஆணை! - Seithipunal
Seithipunal


குரூப் 1 மூலம் தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.பி.யாக உள்ள 28 அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கியதற்கான ஆணையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

தமிழகத்தில் குரூப் 1 மூலம் டி.எஸ்.பி.க்களாக பணியில் சேருகிறவர்கள் பதவி மூப்பு அடிப்படையில் எஸ்.பி.க்களாக பணியாற்றும்போது அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்படுவது வழக்கம் . அதேபோல ஒவ்வோர் ஆண்டும் மாநிலங்களுக்கு யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகி ஐ.பி.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறவர்களைப் போல, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அதிகாரிகளுக்கும் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் தமிழக காவல் துறையில் எஸ்.பி.யாக பணியாற்றும் 28 அதிகாரிகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கி  தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளிட்டிருந்தநிலையில் அந்த 28 எஸ்.பி.களுக்கும் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கியதற்கான ஆணையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இதுதொடர்பான அந்த அறிவிப்பு ஆணையில் ஈஸ்வரன், மணி, செல்வக்குமார், டாக்டர் சுதாகர், எஸ்.ஆர்.செந்தில்குமார், முத்தரசி, பரோஸ்கான் அப்துல்லா, ராமகிருஷ்ணன், சக்திவேல், நாகஜோதி, சுகுமாரன், ராஜராஜன், விமலா, சுரேஷ்குமார், பாஸ்கரன், சண்முக பிரியா, ஜெயக்குமார், மயில்வாகணன், ஜெயலட்சுமி, சுந்தர வடிவேல், உமையாள், எஸ்.சரவணன், டி.செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, ராஜன், செல்வராஜ், ஸ்டாலின் ஆகியோர் அந்த அறிவிப்பு ஆணையில் இடம் பெற்றிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

28 IPS officers in Tamil Nadu Central Government Order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->