பேச்சுவார்த்தைக்கு வரவில்லைஎன்றால் அவ்வளவுதான்... புதினை மிரட்டி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
If you dont come to the negotiating table thats it Trump threatens Putin
ரஷிய அதிபர் புதின், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு வர மறுத்து விட்டால், ரஷியா மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படலாம் என்று டிரம்ப் கூறினார்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஏற்பட்டு 3-ம் ஆண்டை நெருங்கி வருகிறது.இந்தப்போரில் உக்ரைனின் பல நகரங்களை ரஷியா தொடக்கத்தில் கைப்பற்றியது. எனினும், உக்ரைன் பதிலடி கொடுத்து அவற்றை பின்னர் மீட்டது.இந்த போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு வழங்கிவருவதுடன் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.இதேபோல ரஷியாவுக்கு வடகொரியாவின் ஆதரவும் இருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப் உக்ரைன் போர் பற்றி கூறும்போது, நாங்கள் ஜெலன்ஸ்கியுடன் பேசி வருகிறோம். புதினிடமும் விரைவில் பேச உள்ளோம் என்றார்.
மேலும் ரஷிய அதிபர் புதின், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு வர மறுத்து விட்டால், ரஷியா மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படலாம் என்று டிரம்ப் உறுதியாக கூறினார்.
ரஷியாவுக்கு எதிராக ஏற்கனவே, பெரிய அளவில் அமெரிக்கா தடைகளை விதித்து இருக்கிறது என்றும் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் விவகாரம் பற்றி குறிப்பிட்ட அவர், தன்னுடைய நிர்வாகம் அதனை கவனத்தில் கொண்டிருக்கிறது என்று டிரம்ப் ஆணித்தரமாக கூறினார்.
மேலும் உக்ரைன் போரை நிறுத்த தலையிடும்படி சீன அதிபர் ஜின்பிங்கிடம், தொலைபேசி வழியே பேசும்போது அழுத்தி கூறினேன் என்றும் டிரம்ப் அப்போது கூறியுள்ளார்.
English Summary
If you dont come to the negotiating table thats it Trump threatens Putin