மீன் வரத்து குறைந்ததால் சென்னை காசிமேட்டில் தொடர்ந்து மீன் விலை உயர்வு.! - Seithipunal
Seithipunal


மீன் வரத்து குறைந்துள்ளதால் சென்னை காசிமேட்டில் தொடர்ந்து மீன் விலை உயர்ந்து உள்ளது.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீனவர்களுக்கு 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். இன்னிலையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 61 நாட்களில் மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று தமிழக மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

இதனால் மீனவர்கள் சிறிய நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகளில் மட்டுமே மீன்பிடிக்க செல்கின்றனர். இவர்கள் பிடித்து வந்த மீன்கள் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இருப்பினும் மீன்பிடி தடை காலத்தினால் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால் சென்னை காசிமேட்டில் தொடர்ந்து மீன்களின் விலை ஏறுமுகத்தில் உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fish prices continue to rise due to supply shortage


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->