மீனவர்களுக்கென்று தனி கூட்டுறவு வங்கி! அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மீன் வளத்துறை சார்பில் மீனவர்கள் கூட்டுறவு வங்கி தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இதில் பேசிய அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன், மீனவர்கள் எளிதில் வங்கி சேவையை பெறும் வகியில், மீனவர்கள் கூட்டுறவு வங்கி தொடங்கப்படும் எனத் தெரிவித்தார். 

மேலும், மீன்களை கையாள்வதற்கு பனிகட்டி உற்பத்தி நிலையங்கள், குளிர்பான கழகங்கள், இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் வாங்கிட 393 பயனாளிகளுக்கு மானியத் தொகையாக ரூ. 24.54 கோடி வழங்கப்படும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரையில் ரூ. 50 கோடி மதிப்பில் நவீன மீன் சந்தைகள் நிறுவப்படும் என்றும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fishermen cooperative Bank


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->