வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா?
five days holidays to bank
வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி போகி பண்டிகை, ஜனவரி 15ம் தேதி பொங்கல் திருநாள், ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17ம் தேதி உழவர் திருநாள் உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு பல்வேறு பெரிய நகரங்களில் இருந்து பலரும் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜனவரி 13 ம் தேதி 2 ம் சனிக்கிழமை, ஜனவரி 14, பொதுவிடுமுறை, ஜனவரி 15, திங்கட்கிழமை பொங்கல், ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என்று தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன், வாட்ஸ் அப் மற்றும் மொபல் வங்கி சேவை உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வங்கிகளுக்கு பல மாநிலங்களில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், உங்களது பணத்தேவைகளை முறையாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
five days holidays to bank