உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கும் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. 

இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேரோட்ட விழாவிற்கான பந்தல்கால் முகூர்த்தம் தைப்பூச நாளில் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து இன்றைய தினம் பங்குனி உத்திர தேரோட்டத்திற்கான கொடியேற்ற நிகழ்ச்சி சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன், மங்கள இசை முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. 

இந்தக் கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடைபெற உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flag hoisting for ther festival in tiruvarur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->