ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்ட விமானம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சர்வதேச விமான நிலையமான சென்னை மீனம்பாக்கம் உள்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நாட்டின் தலைநகர் டெல்லிக்கு பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என்று மொத்தம் 172 பேருடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. 

இந்த விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்லும்போது விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்த விமானி விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்தினார். பின்னர் சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து இழுவை விமானங்கள் மூலம் வழியில் நிறுத்தப்பட்ட விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. உடனே விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி பழுதடைந்த இயந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு போன்ற வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விமானம் பழுதுபார்க்கப்பட்டு சுமார் 7 மணி நேரம் தாமதமாக மாலை 5 மணி அளவில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்டுள்ள எந்திரக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து உடனடியாக விமானத்தை பாதிவழியிலேயே நிறுத்தியதால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flight stop mid way in chennai airport for engine problam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->