சென்னையில் திடீரென உயர்ந்த டிக்கெட் கட்டணம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


பொதுவாக கோடை விடுமுறை நாட்களில் பொதுமக்கள் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்வார்கள். அந்த வகையில் தற்போது கோடை விடுமுறை ஆரம்பமாகியுள்ளதால், மக்கள் சுற்றுலாவுக்கு வெளிநாடுகள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். 

இதற்கிடையே தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை மக்கள் தங்களுடைய சுற்றுலா பயணங்களை திட்டமிட்டு வருகின்றனர்.

இதனால் சென்னையில் இருந்து விமானம் மூலம் சுற்றுலா இடங்களுக்கு செல்ல டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விமான கட்டணமும் வழக்கத்தைவிட உயர்ந்துள்ளன. அதாவது, வெளியூர்களுக்கு செல்வதாலும், விஸ்தாரா விமான சேவை பாதிக்கப்பட்டிருப்பதாலும், டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. 

டெல்லிக்கான கட்டணம் ரூ.8 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. ஸ்ரீநகர், ஜெய்ப்பூருக்கான கட்டணம் ரூ.10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. மதுரைக்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flight ticket price increase in chennai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->