எந்த நேரத்திலும்...! 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! ஆட்சியர்களுக்கு நீர்வளத்துறை பிறப்பித்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஆட்சியர்களுக்கு நீர்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை விடுத்துள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (29.07.2024) காலை 8.00 மணியளவில் 116.360 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்றும், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood Alert Mettur Dam 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->