நீலகிரி மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.! - Seithipunal
Seithipunal


பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தொடரும் கனமழையால் மாயார், பாண்டியாறு, பொன்னம்பழ ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாக பாயும் மாயார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தெப்பக்காடு தற்காலிக பாலத்தை தண்ணீர் முழுவதும் சூழ்ந்துள்ளது.

இதனால் தெப்பக்காடு-மசினகுடி நெடுஞ்சாலையை இணைக்கும் தற்காலிக பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் ராட்சத பைப்புகளில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி வெள்ள நீரை வெளியேற்றம் செய்து போக்குவரத்தை சீரமைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood blocks temporary bridge in mayar river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->