#Breaking : மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு! 11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது நீர்வளத்துறை - Seithipunal
Seithipunal


வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கர்நாடகாவில் இருந்து காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவேரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றிலும் காவிரி ஆட்சியிலும் இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து நேற்று மதியம்  முதல் 65 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் 85 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் என நீர்வளத் துறை சார்பாக 11 டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் மேட்டூர் அணையின் நீர்வரத்து 1.10 லட்சம் கன அடிக்கு மேல் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணைக்கு வரும் மொத்த நீரையும் அப்படியே காவிரியில் திறந்த விட நீர்வளத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் காவேரி கரையோரம் உள்ள 11 டெல்டா மாவட்ட மக்களுக்கு நீர்வளத் துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேட்டூர் அணை ஒட்டியுள்ள காவிரி கரையோர   பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் காவேரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு நீர்வளத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flood warning issued by the Water Resources Department to the people of Delta District


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->