காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் காரை சோதனை செய்த பறக்கும் படை.!
fly squad check congrass mp vijayvasanth car
2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளதால், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியும் ஒன்றாகும்.
இந்த நிலையில், கன்னியாகுமரி உறுப்பினராக உள்ள விஜய் வசந்த் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு அவர் கன்னியாகுமரி தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
அதன் படி, இன்று விஜய் வசந்த் பிரசாரம் முடித்துக்கொண்டு தக்கலை பகுதியில் வந்துகொண்டிருந்த போது அந்த பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அவர்கள் விஜய் வசந்தின் காரை முழுமையாக சோதனையிட்டனர். காரில் எந்த பொருட்களோ, பணமோ இல்லை. முழுமையான சோதனை முடிந்த பின்னர் விஜய் வசந்த் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
fly squad check congrass mp vijayvasanth car