கடைக்காரரிடமிருந்து ரூ.1500 லஞ்சம்! சிக்கிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி! - Seithipunal
Seithipunal


ஸ்ரீவில்லிபுத்தூரில் பெட்டி கடைக்காரரிடமிருந்து ரூ.1500 லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

சந்திரசேகரன் என்பவர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிந்தன் நகர் காலனியில் பெட்டி கடை நடத்தி வருபவர் குருசாமி. இவரிடம் உணவு பாதுகாப்புத் துறை சான்று பெற்றுத் தருவதாக கூறியுள்ளார்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, சந்திரசேகரன் ரூ. 1500 லஞ்சம் பெற்றதாக விருதுநகர் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சந்திரசேகரனை நேற்று கைது செய்தனர்.

பின்னர் பல மணி நேரம் விசாரணைக்கு பிறகு நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்திரசேகனை லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனையடுத்து விருதுநகர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Food Safety Department officer arrested for accepting bribe of Rs1500 from box shopkeeper


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->