ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி.!
food safety department officers raid nilgiri kunnur hotels
ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி.!
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில், சிக்கன் சவர்மா சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பாஸ்ட் புட் கடைகளில் விற்பனை செய்யப்படும் சவர்மா குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் சவர்மா தயாரிக்கும் உணவகங்கள் உட்பட அனைத்து ஓட்டல்களிலும் உணவு பாதுகாப்புத்துறை சோதனை மேற்கொண்டு அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உணவு பாதுகாப்புத் துறையினர் உணவகங்களில் சோதனையிட்டனர். அப்போது குளிர்சாதனப் பெட்டிகளில் கெட்டுப்போன பழைய உணவுகள் சிக்கன் மற்றும் இறைச்சிகள் உள்ளிட்டவை வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், ஏழுக்கும் மேற்பட்ட பிரபல உணவுகங்களில் சோதனை மேற்கொண்டு கெட்டுப்போன இறைச்சிகளை அழித்தனர்.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் ஓட்டல் கடைகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்தச் சம்பவம் குன்னூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
food safety department officers raid nilgiri kunnur hotels